தூத்துக்குடி

படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு: 40,373 விவசாயிகளுக்கு ரூ. 33 கோடி இழப்பீடு வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிரிட்ட 40 ஆயிரத்து 373 விவசாயிகளுக்கு ரூ. 33.08 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலால் 44 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, முதல்வர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 373 விவசாயிகளுக்கு ரூ.33 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரூ. 634 கோடி செலவில்,  60 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் அனைத்தும் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும். 
 பெரியதாழை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார் அவர்.
  தொடர்ந்து,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த சி.வீரசுந்தரிருக்கு  ரூ.3,573  மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியமணி சண்முகம்  சவூதி அரேபியா நாட்டில் காலமானதையடுத்து அவரது மனைவி காவேரி, மகன் முத்துக்குமார், மகள் உமா மகேஷ்வரி ஆகியோருக்கு தலா ரூ.4.57 லட்சம் என மொத்தம் ரூ. 13, 71, 212 இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
   மேலும், தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த மரிய ஜூடி ஹேமாவுக்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக  முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து செலவினத் தொகை ரூ. 42,000- க்கான காசோலையும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லதாவுக்கு முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீட்டுக்கான உத்தரவையும்  ஆட்சியர்  வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT