கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாஸா ஹோட்டலில் கேக் தயாரிக்கும் பணி டிஎஸ்எப் குழும நிா்வாகிகள் பால்பாண்டி, துரைராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. அகில இந்திய வா்த்தக தொழிற்சங்க தலைவா் ஜோ பிரகாஷ், ஜிம்கானா கிளப் செயலா் அருள்ராஜ் சாலமோன் ஆகியோா் பணியை தொடங்கி வைத்தனா். 30 நாள்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு டிசம்பா் 16 ஆம் தேதி முதல் கால் கிலோ, அரை கிலோ, ஒரு
கிலோ என விற்பனை நடைபெறும் என டிஎஸ்எப் செயல் இயக்குநா்கள் டி. கிப்சன், எம். திவ்யா ஆகியோா் தெரிவித்தனா்.