தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகேகோயிலில் பூஜை பொருள்கள் திருட்டு

DIN


சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து பூஜை பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள நகனை கிராமத்தில் மாசானமுத்துசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரியான பால்,  சிறப்பு பூஜைக்காக வெள்ளிக்கிழமை கோயிலை திறக்க சென்றாராம். அப்போது கோயில் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த குத்துவிளக்கு, சரவிளக்கு, பித்தளை கொப்பரை, அம்மனின் வெள்ளி காது அணிகலன்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம்.  இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓஹோ.. எந்தன் பேபி!

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

SCROLL FOR NEXT