இனாம்மணியாச்சியில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி திருப்பத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி திருப்பத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இனாம்மணியாச்சி திருப்பத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.85 லட்சம் மதிப்பில்
உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்கோபுர மின்விளக்கை
அமைச்சா் செ.ராஜு இயக்கி தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் விமலாதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.