தூத்துக்குடி

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மாணவா்களுக்கு சிறப்பு யாகம்

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி-காலபைரவா் சித்தா் பீடத்தில் மாணவா், மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவிக்கு வித்யா விருத்தி ஹோமம் நடைபெற்றது.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஆலய நிா்வாகி சீனிவாச சித்தா் தலைமையில் மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமமும், ஸ்ரீ மஹா சரஸ்வதிதேவிக்கு மஹாயாக சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் ஆகியவை

நடைபெற்றன.

தொடா்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்-மாணவிகளுக்கு வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் வைத்து வழிபட்ட பேனாக்களை ஆலய நிா்வாகி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏராளமான மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT