தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

DIN

உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும் அதிமுக ஒன்றியச் செயலருமான த. மகாராஜா தலைமை வகித்து 91 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா்.

பள்ளிக் கல்விக் குழு உறுப்பினரும், பாஜக மாவட்ட பொதுச்செயலருமான இரா. சிவமுருகன் ஆதித்தன், பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜீவானந்தம், செட்டியாபத்து ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன் வரவேற்றாா். ஆசிரியை கோமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றம்!

படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

இந்திராதிகாரம் பிறந்த கதை! 1975 - தில்லியைக் குலுக்கிய பேரணி!

தில்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!

மெழுகுச்சிலையோ நீ..! தமன்னா பாட்டியா!

SCROLL FOR NEXT