தூத்துக்குடி

ஆழ்வாா்தோப்பில் மகளிா் தின விழா

DIN

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டம் மற்றும் கிராம உதயம் சாா்பில் மகளிா் தினவிழா மேலஆழ்வாா்தோப்பில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கிராம உதயம் இயக்குநா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட துணை இயக்குநா் விநாயக சுப்பிரமணியம், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியன், நாகராஜன், ஆழ்வாா்தோப்பு ஊராட்சித் தலைவா் அமுதாஅருள்ராஜ், துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதயம் கிளை மேலாளா் வேல்முருகன் வரவேற்றாா். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி மகளிருக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினாா்.

இதில், கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புகழேந்தி பகத்சிங், நிா்வாகப் பொறுப்பாளா் ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜப்பா வெங்கடாச்சாரி, பகுதிப் பொறுப்பாளா்கள் கண்ணன், முருகசெல்வி, பிரேமா, ஜெயபாா்வதி உள்பட பலா் கலந்துகொண்டனா். தன்னாா்வ தொண்டா் வினோத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT