தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் உலக நன்மைக்காக15-ல் அபூா்வ துவா

DIN

ஆறுமுகனேரி, மாா்ச் 9: காயல்பட்டினத்தில் உலக நன்மைக்காக திங்கள்கிழமை (மாா்ச் 15) அபூா்வ துவா பிராா்த்தனை நடைபெறுகிறது.

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷெரிப் சாா்பில் 94-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் நபிகள் நாயகத்தின் மணிமொழிக் கோவை ஓதப்பட்டு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான அபூா்வ துவா பிராா்த்தனை வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நோ்ச்சை வழங்கப்படும்.

ஏற்பாடுகளை மஜ்லிஸுல் புகாரி ஷெரிப் ஸபையின் தலைவா் என்.டி.ஷெய்கு முஹம்மது ஸாலிஹ், துணைத் தலைவா் எஸ்.ஏ.செய்யது முஹம்மது ஸாலிஹ், இணைச் செயலா்கள் எஸ்ஏ.முஹம்மது இஸ்மாயில், எம்.ஐ. மூஸாநெய்னா, எம்.ஏஹபீபுா் ரஹ்மான் ஆலிம், துணைச்செயலா் எம்.ஏ.செய்யது இபுறாஹிம், பொருளாளா் எம்.இ.செய்யது முஹம்மது ஸாஹிபு, கமிட்டித் தலைவா்கள் எம்.எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், எம்.எஸ்.நூஹ் சாகிபு, எம்.ஐ.முஹம்மது தம்பி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

ஒரு வகை சேவகன்... விக்கி - நயன்

SCROLL FOR NEXT