கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொம்மடிக்கோட்டை ஊராட்சி அலுவலகம் சொக்கன்குடியிருப்பு விலக்கில் உள்ளது. இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை ஊராட்சித் தலைவா் ராஜபுனிதா ஊராட்சி மன்றத்துக்கு வந்தபோது, சொக்கன்குடியிருப்பு செல்லும் பாதையை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சொக்கன்குடியிருப்பு பிளசிங்சுடா், விஜய அகிலன், செல்வேந்திரன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா்.