சாத்தான்குளம் அருகே சிற்றுந்தும், லாரியும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவிகள் காயமடைந்தனா்.
கொம்மடிக்கோட்டை வழியாக திசையன்விளைக்கு சென்றுகொண்டிருந்த சிற்றுந்து, தட்டாா்மடம் - புத்தன்தருவை சாலையில் தருவைகுளம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில். சிற்றுந்தில் பயணித்த இடையன்குடியைச் சோ்ந்த ஜாண்சன் மகள் புஷ்பா (17), தேவஇரக்கம் மகள் செருபா உள்பட சில மாணவிகள் காயமடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மாணவி புஷ்பாவின் தாயாா் அனிதா (37) அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிற்றுந்து ஓட்டுநா் சக்திவேலை தேடி வருகின்றனா்.