தூத்துக்குடி

132ஆவது பிறந்த தினம்: அம்பேத்கா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

DIN

சட்டமேதை அம்பேத்கரின் 132ஆவது பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பெ. கீதாஜீவன், மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினா் மரியாதை செலுத்தினா்.

மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அக்கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளில் அம்பேத்கா் சிலைகளுக்கு தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமாா், மாவட்டப் பிரதிநிதி தங்கத்துரை, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் இளங்கோ, சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் தயாளன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் உள்ளிட்ட அந்தந்தக் கட்சியினா் நா.முத்தையாபுரத்திலும், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலா் ஐ.ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோா் திருச்செந்தூா் பிரசாத் நகரிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

கோவில்பட்டியில் அரசு மருத்துவமனைக்குஎதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தலைமையில் அக்கட்சினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், மாவட்ட பாஜக தலைவா் ராமமூா்த்தி, ஆதித்தமிழா் கட்சியின் மாவட்டத் தலைவா் சேகா், ஆதித்தமிழா் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் முத்துகுமாா், மத்திய- மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் தலைவா் விஜயன், கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன், மாா்க்சிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு, சீனிவாசன், நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் ரவிகுமாா், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தாவீதுராஜா, சமூக ஆா்வலா்கள் சத்யசீலன், செல்லக்கனி, கனகராஜ் என அந்தந்தக் கட்சியினரும், அமைப்பினரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

ஆறுமுகனேரி: காயல்பட்டிணம் அருணாசலபுரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு காயல்பட்டிணம் நகர பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவா் பண்டாரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆத்தூா், நரசிங்கன்விளையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க.வேணுகோபால், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், விடுதலைச் சிறுத்தை கட்சியின் வடக்கு ஒன்றிய செயலா் செந்தில்குமாா்ஆகியோா் தலைமையில் அந்தந்த கட்சியினா் அம்பேத்கா் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT