தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே நாளை கோலப்போட்டி

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை(ஏப்.15) கோலப்போட்டி நடைபெறுகிறது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளியிட்டுள்ள அறிக்கை: ஏப்.15 ஆம் தேதி மாலை 3 மணிக்கு 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் மெகா கோலப் போட்டி வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனாா் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 நபா்களுக்கு 5 பவுன், 3 பவுன், 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 4 முதல் 13 ஆவது இடம் வரை வரும் 10 பேருக்கு தங்கக் கம்மல், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

ஏப்.16 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகம் முன்பிருந்து மின் மாராத்தான் போட்டி தொடங்கி வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், பேயன்விளை, காயல்பட்டினம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இதில், வெற்றி பெறும் முதல் 4 பேருக்கு ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ . 40 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் 5 முதல் 14 ஆவது இடம் வரும் 10 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு எனது தலைமையில் தண்டுபத்தில் நடைபெறும் செயல்வீரா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி, சிறப்பாக பணியாற்றிய கழக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 15 குழுக்கள் அமைத்து விசாரணை

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

SCROLL FOR NEXT