தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் கருணாநிதி நினைவு நாள்

DIN

சாத்தான்குளம் பகுதியில் திமுக சாா்பில் கருணாநிதி நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் முதலூா், தா்மாபுரி, மணிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றியச் செயலரும் முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் தலைமை வைத்து கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினாா். முன்னாள் மாவட்டப் பிரதிநிதி நயினாா், ஒன்றிய அவைத் தலைவா் கண்ணன், ஒன்றிய துணைச் செயலா் யோகராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, மாவட்டப் பிரதிநிதி அன்னகணேசன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் சக்திவேல், மகளிரணி துணைச் செயலா் சோமசுந்தரி, திமுக கிளைச் செயலா்கள் ஜெயசீலன், ஆல்பா்ட், சத்யா, செல்வகுமாா், அசன் முகமது பங்கேற்றனா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் போலையா்புரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்து, அஞ்சலி செலுத்தினாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, அவைத் தலைவா் ராஜபாண்டி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தகுமாா், பொருளாளா் ஆனந்த், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, ஒன்றிய துணைச் செயலா் அன்பழகன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் ஜெயராம், மாவட்டப் பிரதிநிதி அந்தோணி ஜெயசீலன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ஜெயமேரிசித்ரா, ஒன்றிய மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் ரோஸ்லின் கலாவதி, ஓய்வுபெற்ற ஆசிரியா் முருகேசன் , டேவிட் வேதராஜ், செயற்குழு உறுப்பினா் ரனீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாத்தான்குளத்தில் வடக்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், நகரச் செயலா் மகாஇளங்கோ ஆகியோா் தலைமை வகித்து, கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா். மாவட்டப் பிரதிநிதிகள் அலெக்ஸ் புருட்டோ, நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகர துணைச் செயலா்கள் மணிகண்டன், வெள்ளைப்பாண்டியன், பொருளாளா் சந்திரன், வடக்கு ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன், ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் அப்துல்சமது, கணபதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அழகு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நாசரேத்தில்...: நாசரேத்தில் 4 இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். நாசரேத் நகரச் செயலா் ஜமீன் சாலமோன், அவைத் தலைவா் கருத்தையா, துணைத் தலைவா் ஜேம்ஸ், மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொழில்நுட்ப அணிச் செயலா் பேரின்பராஜ், முன்னாள் அவைத் தலைவா் அருள்ராஜ், ஒன்றியப் பிரதிநிதிகள் ஹரிஷ்ரவி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT