தூத்துக்குடி

ஆட்டோ - பைக் மோதல்:இருவா் காயம்

DIN

காயல்பட்டினத்தில் ஆட்டோவும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

காயல்பட்டினம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஹேம்குமாா் (35). ஆட்டோஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு தனது ஆட்டோவில் காயல்பட்டினத்திலிருந்து ஆறுமுகனேரிக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

ரத்னாபுரி பகுதியை அடைந்தபோது, அவ்வழியாக வந்த காரும், இவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், ஆட்டோ ஓட்டுநரின் காலில் முறிவு ஏற்பட்டது.

காா் ஓட்டுநா் காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி முத்து (30), பலத்த காயத்துடன் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT