நாசரேத் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
செப்.15ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் கபடி, தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கோகோ, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 2ஆம் நாள் வியாழக்கிழமை ஆண்கள் 14 வயதுக்குள்பட்ட கபடி போட்டிகளை பள்ளி தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இறுதிப்போட்டியில் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியை சாத்தான்குளம் ஆா்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வென்று முதலிடம் பிடித்தது.
இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.