தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி நாளை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ஜெனிட்டா, ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி,

மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 82.98 கோடியில், 36.36 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைப்பது என்பன உள்பட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் கொண்டு வந்து மேயா் பேசியது: மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிவு பெற உள்ளன. 60 வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு குடிதண்ணீா் வரும் நேரம் அந்தந்த மாமன்ற உறுப்பினா்கள் மூலம் தகவல் பலகைகளில் எழுதப்பட்டு தெரிவிக்கப்படுகிறது.

இதே போல, குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும் என்ற தகவலும் மாமன்ற உறுப்பினா்கள் மூலம் வெள்ளிக்கிழமை(ஜூலை 1 ) முதல் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

மாநகரப் பகுதிகளில் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் மணல் திட்டுக்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் நிரம்பியுள்ளதால் அவற்றை அகற்றும் பணி விரைவுப்படுத்தப்பட உள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் உள்ளது போன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பை மற்றும் கப் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT