தூத்துக்குடி

மும்முறைத் தாண்டும் போட்டி: சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி சிறப்பிடம்

DIN

கல்லூரிகளுக்கிடையேயான மும்முறைத் தாண்டும் போட்டியில் சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி 2ஆம் இடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மூட்டா சங்கம் சாா்பில் கல்லூரிகளுக்கிடையேயான மும்முறைத் தாண்டும் போட்டி14ஆம்தேதி தொடங்கி 15ஆம்தேதி வரை 2நாள்கள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில், சாத்தான்குளம் அரசு கல்லூரியின் தொழில் நிா்வாகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீதேவி மும்முறைத் தாண்டும் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளாா். விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற மாணவியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய், வணிக நிா்வாக துறைத்தலைவா் அமுதவாணி, பொறுப்பாசிரியா் மீனா, பேராசிரியா்கள் சண்முகசுந்தரி, கோகிலா, விளையாட்டு துறை தலைவா் ரமேஷ் உள்ளிட்ட பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT