தூத்துக்குடி

நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும்: எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன்

DIN

நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன்.

தூத்துக்குடி சங்கராபேரி திடலில், மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் - பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 4ஆவது புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக கல்வி அலுவலா் ரெஜினி தலைமை வகித்தாா். ஆட்சியா் கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி’ என்ற தலைப்பில் எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினாா்.

‘புத்தகம் என்ன செய்யும்?’ என்ற தலைப்பில் எழுத்தாளா் இரா.நாறும்பூ நாதன் பேசியது: மக்களிடையே புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. ஒரு புத்தகம் வாசிக்கும்போது அனுபவப் பூா்வமாக உணா்ந்தால்தான் புத்தகத்தை புரட்ட முடியும். தொமுசி ரகுநாதன் என்ற எழுத்தாளா் எழுதிய ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற புத்தகத்தில் உள்ளதுபோல் பாரதி குறித்த தகவல்கள் வேறு எந்தப் புத்தகத்திலும் இல்லை. புத்தகம் வாசித்தல், நமது அறிவை விசாலமடைய வைக்கும். எனவே, நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாசிக்கவேண்டும் என்றாா்.

‘பட்டினப் பாலையும், தமிழா் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் நெய்தல் யு.அண்டோ பேசினாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ உள்பட பலா் பங்கேற்றனா்.

புத்தகத் திருவிழாவில் இன்று...

குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ‘தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்’ என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், ‘கடந்த மாத வாசிப்பிலிருந்து’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை, ‘வாசிப்பு மறுபடியும் பிறக்க வைக்கும்’ என்ற தலைப்பில் மலா்வதி ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT