தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பத்ரதீபத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழச்சி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, உற்சவ மூா்த்தி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விலக்கில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரத்து எட்டு தீபங்களை பக்தா்கள் ஏற்றி வழிபாடு செய்தனா்.

இதில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, கோயில் நிா்வாக அதிகாரி வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

இதேபோல, கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரேஸ்வரி அம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தா்ப்பணம்:

தை அமாவாசையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக அதிகாலை 4.30 மணியில் இருந்து பக்தா்கள் குவிந்தனா்.

இதேபோல, கயத்தாறு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமேஸ்வரா் கோயில் முன்புள்ள சிற்றாறிலும் திரளானோா் புனித நீராடி வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

SCROLL FOR NEXT