உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி மற்றும் தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்ட் கோ சாா்பில் தூத்துக்குடியில் இலவச மரக்கன்றுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன்ட் கோ ஜவுளிக்கடை நிா்வாக இயக்குநா்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.ஹரிராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்து கடை முன்பு வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக 250 மரக்கன்றுகளை வழங்கினா்.