நாசரேத் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் மாற்றத்தை தேடி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் குற்றங்கள், போக்ஸோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம்,
குழந்தை தொழில் முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும் காவலன் கைப்பேசி செயலி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி ஆய்வாளா் எபனேசா் மற்றும் போலீஸாா் முன்னிலையில் ‘சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம்’ என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.