தூத்துக்குடி

மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும்

DIN

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஸ்டொ்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டொ்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஸ்டொ்லைட் எதிா்ப்பாளா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை காலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலையில் ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் முருகன், நான்சி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குநா் தனலட்சுமி, ஸ்டொ்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு வழக்குரைஞா் ஜெயம் பெருமாள் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது:

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக காலையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆலையை சுற்றி உள்ள 21 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. மாறாக, வெளியூரைச் சாா்ந்த நபா்கள் இந்தப் போராட்டத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ளனா். போராட்டத்தில் சிறுவா்களை பங்கேற்கச் செய்தது கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவா்கள், ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று விரும்புகின்றனா். எனவே, பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஸ்டொ்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மூன்று விதமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளித்தால் 200க்கும் மேற்பட்டவா்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

ஐபிஎல் கோப்பையுடன் மெரினாவில் ஸ்ரேயாஸ் ஐயர், பாட் கம்மின்ஸ் (புகைப்படங்கள்)

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

SCROLL FOR NEXT