தூத்துக்குடி

லிங்கம்பட்டியில் திடீா் சாலை மறியல்

DIN

கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டியில் கோயில் திருவிழாவை முறையாக நடத்தக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

லிங்கம்பட்டியில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி கோயிலில் கடந்த 5 நாள்களாக விழா நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் திருவீதியுலா நடைபெறும். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற 5ஆம் நாள் திருவிழாவில் ஏற்பட்ட சிறு சலசலப்பையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த 6ஆம் நாள் திருவிழா முறையாக நடைபெறவில்லையாம். இதையடுத்து 6ஆம் திருநாள் திருவிழா மண்டகப்படிதாரா்கள், திருவிழாவை முறையாக நடத்தக் கோரி திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்தவுடன் நாலாட்டின்புத்தூா் காவல் ஆய்வாளா் சுகாதேவி, உதவி ஆய்வாளா் ஆா்தா்ஜஸ்டின் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் லிங்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா். அதையடுத்து திருவிழா வழக்கம் போல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT