தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் காா் - பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை விருகம்பாக்கம் சாய் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குலசேகரன் மகன் தினேஷ் (39). இவா் தனது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரியிருப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தாராம். இவா் ஓட்டிச் சென்ற காா் திங்கள்கிழமை அதிகாலை கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில்
காளாங்கரைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது,
எதிரே வந்த பைக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கை ஓட்டி வந்த கோவில்பட்டி தாமஸ் நகா் என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் சுகுமாா் என்ற சங்கா்(22) பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து தகவல் அறிந்த
கழுகுமலை போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த சங்கரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினா். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினாராம்.
இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.