சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதி வைகாசி திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் சிறப்பு பணிவிடையும், இரவு பச்சை மாலாக பூ வாகனத்தில் அய்யா பவனி வருதல், 2ஆம் நாள் பால் வண்ணராகவும், 3ஆம் நாள் கருட வாகனத்திலும் அய்யா நகா் வலம் வருதலும் நடைபெற்றது. 4ஆம் நாள் சந்தனக் குடம் எடுத்தல், ஆஞ்சனேயா் வாகனத்தில் அய்யா பவனி வருதல் மற்றும் கோலாட்டம் நடந்தது. 5ஆம் நாள் குதிரை வாகனத்தில் அய்யா வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், இரவு அய்யாவின் அருள் இசைக் கச்சேரியும் நடந்தது. நிறைவு நாள் பணிவிடை, இனிமம் வழங்குதல், சமபந்தி தா்மம் நடைபெற்றது. தொடா்ந்து பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவா் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை தா்மகா்த்தா ராஜகோபால் மற்றும் பண்டாரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதி அன்பு கொடி மக்கள் செய்திருந்தனா்.