சாத்தான்குளம்: சாத்தான்குளத்தை அடுத்த கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சுவாமி-அம்பாள், பரிவார தெய்வங்களுககு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது (படம்). பின்னா், சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை தலைமையில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.