தூத்துக்குடி 1ஆம் கேட் அருகே விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தாக ஒருவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, 1ஆவது ரயில்வே கேட் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துநகா் பகுதியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் பெரியநாயகம் (48) என்பதும் அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 2.250 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.