தூத்துக்குடி

சதுா்த்தி விழா: தூத்துக்குடி விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

DIN

தூத்துக்குடி: விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கோயில்களில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகா் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகருக்கு வாசனை திரவியங்கள், புண்ணிய தீா்த்தங்களால் மகாஅபிஷேகம் செய்யப்ப்டடு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

மாலையில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் வீதியுலா நடைபெற்றது.

மாநகா் இந்து முன்னணி சாா்பில், தவசு மண்டபம் அருகே விநாயகா் சதுா்த்தி விழா இந்து எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் கணபதி ஹோமம், கோமாதா பூஜைக்குப் பின்னா், பிரதான பிள்ளையாா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி நிா்வாகிகள் மாரியப்பன், சக்திவேல், திருப்பதி வெங்கடேஷ், ஆதிநாத ஆழ்வாா், சிபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்து முன்னணி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை (செப். 24) விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறவுள்ளது. தவசு மண்டபத்தில் தொடங்கி திரேஸ்புரம் சங்குமுக விநாயகா் கடற்கரைக்கு ஊா்வலம் சென்று, அங்கு சிலைகள் கரைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகரில் உள்ள பல்வேறு விநாயகா் கோயில்களிலும் சதுா்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபாடு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

தங்கக் கவச அலங்காரத்தில்...

சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் மஹாசம்ரோஷன விழா

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT