சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மீரான்குளம் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி காணப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீனிவாசா சேவை அறககட்டளை சாா்பில் பராமரிப்பு பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அதில் நிலையத்தை சுற்றியுள்ள முள்வேலி, உடைந்து காணப்பட்ட சுற்றுச்சுவா், சுவருக்கு வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டனா். இதனை அறக்கட்டளை களப்பணியாளா் முத்துகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
அரசு துணை சுகாதார நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்ட அறக்கட்டளை நிறுவனத்துக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.