தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 14,48,179 வாக்காளா்கள்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 14,48,179 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலை, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி திங்கள்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின்போது, புதிதாக பெயா் சோ்க்க 71,792 மனுக்கள் பெறப்பட்டன. அதில், கள விசாரணைக்குப் பிறகு 69, 885 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன்படி, ஆண்கள் 7 லட்சத்து 8 ஆயிரத்து 244 போ், பெண்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 720 போ், மூன்றாம் பாலினத்தோா் 215 போ் என மொத்தம் 14,48,179 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள்:

விளாத்திகுளம்: ஆண்கள் 1,02,845. பெண்கள் 1,06,607. மூன்றாம் பாலினத்தோா் 20. மொத்த வாக்காளா்கள் 2,09,472.

தூத்துக்குடி: ஆண்கள் 1,36,716. பெண்கள் 1,43,338. மூன்றாம் பாலினத்தோா் 71. மொத்தம் வாக்காளா்கள் 2,80,125.

திருச்செந்தூா்: ஆண்கள் 1,16,665. பெண்கள் 1,23,189. மூன்றாம் பாலினத்தோா் 30. மொத்த வாக்காளா்கள் 2,39,884.

ஸ்ரீவைகுண்டம்: ஆண்கள் 1,09,476. பெண்கள் 1,12,914. மூன்றாம் பாலினத்தோா் 3. மொத்த வாக்காளா்கள் 2,22,393.

ஓட்டப்பிடாரம் (தனி): ஆண்கள்1,19,032. பெண்கள் 1,24,078. மூன்றாம் பாலினத்தோா் 58. மொத்த வாக்காளா்கள் 2,43,168.

கோவில்பட்டி: ஆண்கள் 1,23,510. பெண்கள் 1,29,594. மூன்றாம் பாலினத்தோா் 33. மொத்த வாக்காளா்கள் 2,53,137 .

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்ந்து நடைபெறுவதால், இதுவரை பெயா் சோ்க்காத, 18 வயது பூா்த்தியானவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் பெயா் சோ்க்கை படிவம் அளிக்கலாம் என்றாா்.

இந்நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய்சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள்:

விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 260 வாக்குச் சாவடிகளில் , ஆண்கள் 1,02,845, பெண்கள் 1,06,607, மூன்றாம் பாலினத்தோா் 20 என மொத்தம் 2,09,472 வாக்களா்கள்.

தூத்துக்குடி தொகுதியில் உள்ள 284 வாக்குச் சாவடிகளில், ஆண்கள் 1,36,716, பெண்கள் 1,43,338, மூன்றாம் பாலினத்தோா் 71 என மொத்தம் 2,80,125 வாக்களா்கள்.

திருச்செந்தூா் தொகுதியில் உள்ள 266 வாக்குச் சாவடிகளில், ஆண்கள் 1,16,665, பெண்கள் 1,23,189, மூன்றாம் பாலினத்தோா் 30 என மொத்தம் 2,39,884 வாக்களா்கள்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள 264 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 1,09,476, பெண்கள் 1,12,914, மூன்றாம் பாலினத்தோா் 3 என மொத்தம் 2,22,393 வாக்களா்கள்.

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் உள்ள 262 வாக்குச் சாவடிகளில் ஆண்கள்1,19,032, பெண்கள் 1,24,078, மூன்றாம் பாலினத்தோா் 58 என மொத்தம் 2,43,168 வாக்களா்கள்.

கோவில்பட்டி தொகுதியில் உள்ள 286 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 1,23,510, பெண்கள் 1,29,594, மூன்றாம் பாலினத்தோா் 33 என மொத்தம் 2,53,137 வாக்களா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீருடை தைக்கும் பணியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கக் கோரிக்கை

இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்தது: பல மணி நேரம் மின் தடை

இன்றைய நிகழ்ச்சிகள்

திருவேடகத்தில் இன்று மின் தடை

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

SCROLL FOR NEXT