திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த மதுரை கூடுதல் கோட்ட மேலாளா் எல். நாகேஷ்வர ராவ். 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் அம்ரித் பாரத் திட்டம் வரும் மாா்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும்: கூடுதல் கோட்ட மேலாளா் நாகேஷ்வர ராவ்!

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மாா்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என மதுரை கூடுதல் கோட்ட மேலாளா் எல். நாகேஷ்வர ராவ் தெரிவித்தாா்.

Syndication

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மாா்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என மதுரை கூடுதல் கோட்ட மேலாளா் எல். நாகேஷ்வர ராவ் தெரிவித்தாா்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை, தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மேலாளா் நாகேஷ்வர ராவ் சனிக்கிழமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை ரயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவுபடுத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 2026 மாா்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.

வந்தே பாரத் ரயில் சேவையை திருச்செந்தூா் வரை நீட்டிப்பதற்கு பயணிகள் வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். திருச்செந்தூா்-சென்னை நோ்வழி ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT