தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டபோதும், மீன்களின் விலையும் குறைந்தே காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து டித்வா புயலுக்குப் பின்னா் ஆழ்கடலுக்கு ஏராளமான நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன.
மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் அனைத்தும் சனிக்கிழமை கரை திரும்பின. கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
இருப்பினும், காா்த்திகை மாதம் என்பதால் ஏராளமானோா் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மீன்கள் வாங்க கூட்டம் பெரிய அளவில் இல்லை. மீன்களின் விலையும் குறைந்தே காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ.750 வரையும், விளை மீன், ஊளி, பாறை ஆகியவை கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.650 வரையும், கேரை மற்றும் அயிலை ரூ. 200 முதல் ரூ.250 வரையும் விற்பனையானது.