ஆறுமுகனேரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, ஜேசிபி, 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
ஆறுமுகனேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தாமஸ், காவலா் காா்த்திக்ராஜ் ஆகியோா் காயல்பட்டினம் புறவழிச் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, சாலையோரமுள்ள தனியாா் இடத்தில் சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் திருடினராம்.
அவா்கள் டிராக்டா்கள் ஓட்டுநா்களான அடைக்கலாபுரம் சுனாமி நகா் இன்னாசிராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (19), ஆறுமுகனேரி காமராஜபுரம் எப்ரான் லூா்துமணி மகன் முத்துராஜ் (21), ஜேசிபி டிரைவரான ஆறுமுகனேரி பாரதிநகா் ஜேம்ஸ் மகன் ஆகாஷ் (20) என விசாரணையில் தெரியவந்தது.
உதவி ஆய்வாளா் வாசுதேவன் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, ஜேசிபி இயந்திரம், 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தாா். அவா்களை ஆய்வாளா் திலீபன் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தாா்.