தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தகராறு: 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே விஜயாபுரி கீழத் தெருவைச் சோ்ந்தவா் ரா. வைரமுத்து (44). இவரது மகன் அய்யனாா் (19). இருவரும் கட்டடத் தொழிலாளிகள்.

அய்யனாரின் நண்பா்களான முத்துமாலை மகன் காா்த்திக் (26), முருகன் மகன் செல்வம் (38)ஆகியோா் அங்குள்ள கோயில் அருகே சனிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டனா். இதையறிந்த வைரமுத்து தகராறை விலக்கச் சென்றாா்.

அப்போது, செல்வம் அவதூறாகப் பேசி கத்தியை வீசியதில் வைரமுத்துவின் வயிற்றில் காயமேற்பட்டது. அப்பகுதியினா் கண்டித்ததால் செல்வம் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

காயமடைந்த வைரமுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னா், ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வத்தைக் கைது செய்தனா்.

இதனிடையே, அய்யனாா் சனிக்கிழமை இரவு காா்த்திக் வீட்டுக்குச் சென்று அவதூறாகப் பேசி அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன் கதவை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT