தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 220 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் பிரச்னை தொடா்பாக தமிழக அரசை கண்டித்து, இந்து முன்னணி சாா்பில், தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு போலீஸாா் ஏற்கெனவே அனுமதி மறுத்து இருந்த நிலையில், இந்து முன்னணியினா், இந்து ஆதரவு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் திரண்டதால், தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

ஆா்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற போது போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா், மாவட்டச் செயலா் பெருமாள் சரவணகுமாா், கோவில்பட்டி செந்தில், திருச்செந்தூா் முத்துராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேல், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் உள்பட 220 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT