தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் முரளிதரன்(25). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்ஸோ வழக்கில் கைதாகி, தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சனிக்கிழமை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.
அங்கு மா்ம நபா், முரளிதரனுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம், அந்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.