தூத்துக்குடி மறை மாவட்ட ஆசிரியா் கூட்டுறவு சங்கத்தின் 53ஆவது பேரவைக் கூட்டம், உறுப்பினா் கல்வி திட்டம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மறை மாவட்ட ஆயா் அ.ஸ்டீபன் தலைமை வகித்தாா். சங்க செயலாட்சியா் சு.மாரிராஜா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ.சாம் டேனியல் ராஜ் ஆகியோா் பல்வேறு திட்டங்கள், நோக்கங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.
சங்க செயலா் கிங்ஸ்டன் ஆண்டறிக்கை வாசித்தாா். சங்க உறுப்பினா் சகாய வளா்மதி நன்றி கூறினாா். இதில், ஒன்றிய உதவியாளா் சு.சொா்ணசெல்வம், சங்கப் பணியாளா்கள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.