தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன் வாங்க குவிந்த மக்கள்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில், மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், கடற்கரை ஏலக்கூடத்தில் மீனவா்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனா். சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் ரூ.400, விளை மீன் ரூ.550 முதல் 650 வரையும், ஊளி மீன் ரூ.500 முதல் 550 வரையும், சூரை மீன் ரூ.200, கடவு இறால் ரூ.500-க்கும், சூப்பா் நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரையும், ஐலேஷ் கிலோ ரூ.200 வரையும், நகரை ரூ.250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

விடுதலை நாள்: காரைக்காலில் கலை நிகழ்ச்சி

தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT