கழுகுமலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையில் போலீஸாா் சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையாா் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவரிடம் சோதனை நடத்தியதில், கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருப்பதும், ஆரியங்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கழுகுமலை அரண்மனை வாசல் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் சோமு (73) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த 46 லாட்டரி சீட்டுகள், ரூ.5,400, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.