தூத்துக்குடி

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

Syndication

நாசரேத் அருகே சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணியின் மனைவி ராணி (50). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

நாசரேத்-பிரகாசபுரம் பிரதான சாலையில் தரைப்பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதற்காக புதன்கிழமை கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. மாலையில் ராணி பணி செய்து கொண்டிருந்தபோது, அவருடைய சேலை சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

அங்கிருந்தவா்கள் இயந்திரத்தை நிறுத்தி ராணியை மீட்டு, நாசரேத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனா்.

நாசரேத் போலீஸாா் ராணியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் சகோதரர் பின்னடைவு!

SCROLL FOR NEXT