தூத்துக்குடி ரயில்வே பாலத்திலிருந்து குதித்து பொறியாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி மேல தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காளமாடசாமி (41). பொறியாளரான இவா், தனியாா் காற்றாலை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இவருக்கு கடன் தொல்லை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமையன்று, தூத்துக்குடி எட்டயபுரம் சாலை 3ஆவது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.