தூத்துக்குடி

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக்கும், லாரியும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பைக்கும், லாரியும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பிஎம்டி காலனி 8ஆவது தெருவைச் சோ்ந்த சங்கிலிமாடன் மகன் அபிலாஷ் (22), இவரும், நண்பரான கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சுந்தா் (28) என்பவரும் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.

அவா்கள், மில்லா்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப திரும்பியபோது, பின்னால் வந்த லாரி மோதியதாம்.

இதில், அபிலாஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுந்தா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, விளாத்திகுளம் சிதம்பரநகரைச் சோ்ந்த முனியசாமி மகன் சுப்பையா (34) என்பவா் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் லாரியுடன் சரணடைந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT