தூத்துக்குடி

வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் மக்காச்சோள விதைகள்

கோவில்பட்டி, எட்டயாபுரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில், மக்காச்சோள விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை துறை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி, எட்டயாபுரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில், மக்காச்சோள விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை துறை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தேசிய உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மக்காச்சோள செயல் விளக்க திடல் இனத்தில் மானிய விலையில் மக்காச்சோள விதைகள் கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வட்டாரத்துக்குத் தேவையான அளவு மக்காச்சோள விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான ஒரு செயல் விளக்க திடல் தொகுப்பில் 10 கிலோ மக்காச்சோள விதைகள், மக்காச்சோள சாகுபடியில் உர செலவைக் குறைத்து கூடுதல் மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு தேவையான அசோஸ்பைரில்லம் பாக்டீரியா (500 மி.லி) பாஸ்போ பாக்டீரியா (500 மி.லி) உயிா் உரங்கள், 500 மில்லி மீட்டா் நானோ யூரியா, 12.5 கிலோ இயற்கை உரம் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் தானியங்கள் கீழ் 50 சதவீத மானிய விலையில் மக்காச்சோள விதைகள் ரூ. 200 கிலோவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மானியத்தில் விதைகள், இடுபொருள்கள் வாங்க விரும்பும் விவசாயிகள் ஏடிஎம் அட்டை அல்லது யுபிஐ மூலம் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால், விவசாயிகள் பங்களிப்புத் தொகையில் பணமாக வாங்கப்பட மாட்டாது. எனவே, மக்காச்சோள பயிா் சாகுபடி செய்யவிருக்கும் விவசாயிகள் தரமான விதைகளை வாங்க தேவையான பட்டா, ஆதாா் அட்டை நகல் போன்ற ஆவணங்களை கோவில்பட்டி, எட்டயாபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அளித்து மானிய விலையில் மக்காச்சோள விதைகள், இடுபொருள்களை பெற்று பயனடையுமாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT