தூத்துக்குடி

அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள் திருச்செந்தூரில் சிறப்பு தரிசனம்

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்தனா்.

சுவாமிமலையில் தொடங்கி, திருத்தணி, பழனி, பழமுதிா்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்ற 200 பக்தா்கள், அறநிலையத்துறை அலுவலா்கள், மருத்துவக் குழுவினா் உள்ளிட்டோா் புதன்கிழமை திருச்செந்தூா் வந்தனா்.

பக்தா்கள், ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்ததை தொடா்ந்து, சண்முக விலாசம் மண்டபத்தில் கோயில் சாா்பில் பன்னீா் இலை, கோயில்கள் வரலாற்று புத்தகம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதத்தை இணை ஆணையா் க.ராமு வழங்கினாா். நிகழ்ச்சியில் உதவி ஆணையா் நாகவேல், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, கண்காணிப்பாளா்கள் விஜயலெட்சுமி, விவேக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT