தூத்துக்குடி

இமானுவேல் சேகரனாா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

Syndication

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மத்திய ஒன்றிய செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன் தலைமையில் நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி, இமானுவேல் சேகரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினா் என்.ஆா். கே. என்ற ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், ஒன்றிய செயலா்கள் ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், நகர பொறுப்பாளா் சுரேஷ் , விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் அன்புராஜ் தலைமையில் இமானுவேல் சேகரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்டச் செயலா் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலா் பால்துரை, மாநில பொதுச்செயலா் பொன்னுச்சாமி, மாவட்ட மகளிா் அணி செயலா் அமுதா, துணைச் செயலா் மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் கதிரேசன் தலைமையில் இமானுவேல் சேகரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT