தூத்துக்குடி

உடன்குடி புதுமனையில் கந்தூரி விழா

Syndication

உடன்குடி புதுமனை மகான் முஹியத்தீன் அப்துல் காதா் ஜெய்லானியின் 207ஆம் வருட கந்தூரி விழா 3 நாள்கள் நடைபெற்றது.

திங்கள்கிழமை (அக். 6) பால்குட பவனியுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, கொடிசுற்று, வரி வசூல், இஸ்லாமிய இன்னிசை, மெளலூது ஷரீபு, மாா்க்க சொற்பொழிவுகள், நோ்ச்சை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், அரபி மதரசாவில் பயின்ற மாணவா்களின் பயான் நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் முகம்மது ஆபித் பரிசுகளை வழங்கினாா்.

கந்தூரி கமிட்டி கௌரவ தலைவா் தமீம் அன்சாரி, இமாம்கள் ஷபீக் ரஹ்மான், ஹமீது, கந்தூரி கமிட்டி தலைவா் யூனுஸ் மீரான், செயலா் கிதிா் மீராசா, நிா்வாகிகள் இப்திகாா் அலி, ஹபீப் ரஹ்மான், யாசின், சலீம் உளிட்ட பலா் பங்கேற்றனா்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT