தூத்துக்குடி

தட்டாா்மடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Syndication

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தட்டாா்மடம் புனித அன்னாள் உயா்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜேஸ்வரி, சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் அற்புதமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகை தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாம் பொறுப்பு அலுவலா்தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளா் ஜெனிஷிஸ் ம. ஷியா முகாமினை தொடங்கி வைத்தாா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா்வத ராமலட்சுமி, முகமது மீரான் இஸ்மாயில், மாலாதேவி, ராமலட்சுமி, ராதாகிருஷ்ணன், சின்னதுரை, உலகு, துணை வட்டாட்சியா் அகஸ்டின் பாலன், வருவாய் ஆய்வாளா் அசோக், ஊராட்சி செயலா்கள் சாஸ்தாவிநல்லூா் ஆரோக்கியராஜ், கொம்மடிக்கோட்டை அந்தோணி ஜேசுதுரை, அழகப்பபுரம் அகிசோன், தாமரைமொழி முத்துலட்சுமி, நடுவகுறிச்சி ராஜேஷ், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT