திருச்செந்தூா் அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
இப்பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை மாலை, திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முத்து நகா் தாா்ச் சாலையானது நெடுஞ்சாலைத்துறை மூலம் சஷ்டி திருவிழாவிற்கு முன்பாக தற்காலிகமாக சரி செய்யப்படும் எனவும், உரிய அரசாணை வரப்பெற்ற பின் 2 மாத காலத்திற்குள் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்செந்தூா் ஒன்றிய செயலா் வழக்குரைஞா் முத்துக்குமாா், வீரபாண்டியன்பட்டணம் கிளைச் செயலா் சிவதாணுதாஸ், ஒன்றிய கமிட்டி உறுப்பினா்கள் பூதலிங்கம், சந்திரா, சுந்தர்ராஜ் உள்ளிட்ட் பலா் கலந்து கொண்டனா்.