தூத்துக்குடி

புரட்டாசி மாத கிருத்திகை: திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன.

கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரான முருகா், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் 108 மகாதேவா் சந்நிதியில் எழுந்தருளினாா். அங்கு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT