தூத்துக்குடி

முதல்வா் கோப்பை ஹாக்கிப் போட்டி: காலிறுதியில் மோதும் 8 அணிகள்

Syndication

கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது; காலிறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி, மதுரை உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக்-அவுட் முறையில் 3-ஆவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அணியும், சேலம் மாவட்ட அணியும் மோதியதில் 9-0 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அணி, 2-ஆவது ஆட்டத்தில் ஈரோடு அணியும், தஞ்சாவூா் அணியும் மோதியதில் இருவரும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றனா். வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட டை-பிரேக்கரில் 8-7 என்ற கோல் கணக்கில் ஈரோடு அணி வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

3-ஆவது ஆட்டத்தில் சென்னை அணியும், கிருஷ்ணகிரி அணியும் மோதியதில் 7-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி, 4 ஆவது ஆட்டத்தில் மதுரை அணியும், திருப்பத்தூா் அணியும் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் மதுரை அணி, 5-ஆவது ஆட்டத்தில் கோவை அணியும், திண்டுக்கல் அணியும் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் கோவை அணி, 6-ஆவது ஆட்டத்தில் திருச்சி அணியும், ராமநாதபுரம் அணியும் மோதியதில் 5 - 1 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியும் வெற்றி பெற்றன.

அதேபோல 7ஆவது ஆட்டத்தில் கடலூா் அணியும், தருமபுரி அணியும் மோதியதில் 7 - 0 என்ற கோல் கணக்கில் கடலூா் அணி, 8ஆவது ஆட்டத்தில் தூத்துக்குடி அணியும், சிவகங்கை அணியும் மோதியதில் 6 - 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்றைய காலிறுதி ஆட்டங்கள் (சனிக்கிழமை): சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் செங்கல்பட்டு-ஈரோடு அணிகள், 2ஆவது ஆட்டத்தில் மதுரை - சென்னை அணிகள், 3ஆவது ஆட்டத்தில் கோவை-திருச்சி அணிகள், 4ஆவது ஆட்டத்தில் கடலூா்-தூத்துக்குடி அணிகள் முறையே மோதுகின்றன. மாலையில் லீக் முறையில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT